இன்று விண்ணில் பாய்கிறது PSLV-C43 ராக்கெட்

share on:
Classic

31 செயற்கைக்கோள்களுடன் 'PSLV-C43' ராக்கெட், இன்று விண்ணில் பாய்கிறது. 

வெளிநாடுகளின் 30  செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு செயற்கைக்கோள் அடங்கிய தொகுப்பு, PSLV-C43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.57 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட், ஏவப்படுகிறது. 

இதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை 5.57 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோவின் மூலமாக இதுவரை 28 நாடுகளைச் சேர்ந்த 237 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 

இம்முறை, கொலம்பியா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 4 நாடுகள் இஸ்ரோவின் உதவியை முதன்முறையாக நாடியுள்ளன. 

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உதவியை பெற்றுள்ள சர்வதேச நாடுகளின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.  

PSLV-C43 ராக்கெட்டின் மூலமாக கனடா, ஃபின்லாந்து, நெதர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 31  செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. 

இதன் பிறகு, இந்த அனைத்து செயற்கைக்கோள்களும் 504 கிலோமீட்டர் தூர சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளன. 

இதில், இஸ்ரோவின் தயாரிப்பான 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட ஹைஸிஸ்(HysIS) செயற்கைக்கோளும் செலுத்தப்படுகிறது. 

380 கிலோகிராம் எடையுடைய இந்த ஹைஸிஸ் செயற்கைக்கோள் விவசாய நிலம், வனப்பரப்பு, கடல் பகுதி, நிலத்தடி நீர், மண்வளம் உள்ளிட்ட  புவியின் பல்வேறு சூழல்களை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படவுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind