GSAT-7A செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது GSLV F-11 ராக்கெட்

Classic

இஸ்ரோவின் 35-வது செயற்கைகோளான ஜிசாட் 7-ஏ, ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமானப் படையின் தகவல் தொடர்புக்காக, இஸ்ரோ, ஜிசாட்-7ஏ செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 250 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகளாகும். இஸ்ரோவின் 35-வது தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 7-ஏ, ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

இதற்கான 26 மணி நேர கவுண்டவுன், தொடங்கியது. 415 புள்ளி 6 டன் எடைகொண்ட இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்படும் ஜி-சாட் 7ஏ செயற்கைகோள், பூமியிலிருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sasikanth