வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C43 ராக்கெட்

share on:
Classic

31 செயற்கைக்கோள்களுடன் 'PSLV-C43' ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்தியாவின் ஹைஸிஸ் மற்றும் 8 வெளிநாடுகளின் 30  செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'PSLV-C43 ராக்கெட் மூலமாக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த 31 செயற்கைக்கோள்களும் புவியின் மேற்பரப்பில் 2 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்படுகின்றன. இம்முறை, கொலம்பியா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 4 நாடுகள் இஸ்ரோவின் உதவியை முதன்முறையாக நாடியுள்ளன. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உதவியை பெற்றுள்ள சர்வதேச நாடுகளின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.  

380 கிலோகிராம் எடையுடைய ஹைஸிஸ் செயற்கைக்கோள் தற்போது வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஹைஸஸ் மூலமாக விவசாய நிலம், வனப்பரப்பு, கடல் மற்றும் மண்வளம் உள்ளிட்ட புவி சூழல்களின் தன்மை குறித்து 5 ஆண்டுகளுக்கு துல்லியமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

 

News Counter: 
100
Loading...

aravind