வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள்..!

share on:
Classic

இந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ரிசாட்-2பி செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ரிசாட் - 2 பி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 615 கிலோ எடை கொண்ட ரிசாட்-2பி செயற்கை கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 

பூமியின் மேல் 557 கி.மீ உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள், வானிலை, பேரிடர் மேலாண்மை, ராணுவ பாதுகாப்பு போன்ற பல பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேகக்கூட்டங்களையும் தாண்டி புவியில் நடக்கும் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகப் படமெடுக்கும் திறன்கொண்ட, முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இதுபோன்ற செயற்கைக்கோளை இந்தியா விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக ரிசாட்-1, ரிசாட் -2 ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருந்தாலும் அவற்றால் புவியைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை. ரிசாட் -1 செயற்கைக்கோள், கடந்த 2017-ம் ஆண்டு செயலிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

ரிசாட் - 2பி செயற்கை கோளின் வெற்றிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இஸ்ரோ பெருமையடையச் செய்வதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan