வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11 செயற்கைகோள்

share on:
Classic

அதிவேக இணைய சேவைக்காக உருவாக்கப்பட்ட ஜி சாட் - 11 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகளுடன் கூடிய ஜி சாட்-11 என்ற செயற்கை கோளை உருவாக்கியது. இதை இன்று அதிகாலை பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம்  ஏவியது. நம் நாட்டின் நேரப்படி, அதிகாலை 2 மணி அளவில் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 

குறிப்பாக, 5 ஆயிரத்து 894 கிலோ எடைகொண்ட இந்த ஜி சாட் - 11 என்ற செயற்கை கோள், முழுக்க முழுக்க இந்தியாநாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதை உருவாக்க  12 ஆயிரம் ரூபாய் கோடி செலவானதாகத்தெரிகிறது.

 

News Counter: 
100
Loading...

vijay