ஜூலை 15-ம் தேதி ஏவப்படுகிறது சந்திரயான்-2..!

share on:
Classic

சந்திரயான்-2  ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 2 அனுப்பப்பட உள்ளதாக கூறினார். சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் மாறும். இறுதியாக நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும். 

செப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 3 புள்ளி 8 டன் ஆகும். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind