இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 6ம் தேதி விண்ணில் பாய்கிறது

Classic

இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில், அதிநவீன செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், 40-வது செயற்கை கோளாக ஜிசாட்-31-ஐ இஸ்ரோ தயாரித்துள்ளது. இது, ஐ-2கே பஸ் வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைகோளாகும்.  2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து சேவையாற்ற உள்ள இந்த செயற்கைகோளால், இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றுக்கும் ஜிசாட்-31 செயற்கைகோள் பயன்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind