உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார் சவுரப் சவுத்ரி..!

share on:
Classic

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இளம் வீரர் சவுரப் சவுத்ரி அபாரமாக விளையாடினார். இறுதிப் போட்டியில் 246.3 புள்ளிகளைப் பெற்ற அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

இதே போல, பெண்களுக்கான 25 மீட்டர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் அசத்திய ராகி சர்னோபட் 50 க்கு 37 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். உலக கோப்பையில் இதுவரை 3 தங்கம் வென்றுள்ள இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan