பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல - சென்னை உயர்நீதிமன்றம்

share on:
Classic

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாததையடுத்து, சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.  இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாததையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிப்படி பிரதமர் மற்றும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல என கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

aravind