தொழிலதிபர் தீனதயாளன் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை : ரூ.1 கோடி பறிமுதல்..!!

share on:
Classic

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே தொழிலபதிர் தீனதயாளனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன், ஜவுளி உற்பத்தி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில், 12 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர், மாலை 5 மணியிலிருந்து  சோதனை மேற்கொண்டனர். தீனதயாளனின் அலுவலகம்,  தொழிற்சாலை மற்றும் மொத்த வியாபார குடோன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தீனதயாளனின் சகோதரரும், அதிமுக நிர்வாகியுமான மாதவன் வீட்டில் நடைபெற்ற சோதனையிலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News Counter: 
100
Loading...

Ramya