பிரபல நிறுவனத்தில் 3வது நாளாக தொடரும் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின..??

share on:
Classic

பிரபல பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 12ம் தேதி வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த சோதனை, 3-வது நாளாக இன்று தொடர்கிறது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பை மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளரின் வீடு, உறவினரின் அலுவலகம் உள்ளிட்ட இந்த இடங்களில் நடைபெற்றுவரும் சோதனையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்களில் 4 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், மதுரையில் உள்ள பிரபல கட்டுமான தொழிற்சாலையில் 2 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. மதுரை தெப்பக்குளம் அருகே ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள கட்டுமான தொழிற்சாலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், ணம் மற்றும் ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

vinoth