பிஎஸ்கே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு..!

share on:
Classic

நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரிச்சோதனை நிறைவடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள நடுக்கோம்பையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கணக்கில் வராத பணத்தை பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பி.எஸ்.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நடுக்கோம்பையில் உள்ள பெரியசாமியின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர் செல்வம் என்பவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலையுடன் சோதனை நிறைவு பெற்றதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News Counter: 
100
Loading...

Ragavan