ஒரு மணி நேரம் அதிகம் தூங்குவதால் பயன் உள்ளதா..?

share on:
Classic

மனித வாழ்வில் தூக்கம் என்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட சரியான அருமருந்தாக உள்ளது.

ஒரு மனிதனுக்கு தூக்கம் ஒரு முக்கியமான தேவைகளில் ஒன்று மட்டுமல்ல அது ஒரு அருமருந்தாகும். அதுபோல ஒரு மணி நேர கூடுதல் தூக்கம், ஒரு மணிநேர உடற் பயிற்சி மற்றும் ஒரு மணி நேர ஆழமான கூடுதல் வேலை, இவை அனைத்துக்கும் தூக்கம் ஆழ்ந்த நேர்மறையான தாக்கத்தை ஒரு மனித வாழ்க்கையில் கண்டிப்பா கொடுக்கும் என்பதுதான் உண்மை.

நாம் நம் அன்றாட வாழ்வில் தினமும் செய்வதெல்லாம் என்ன..?

இன்றய இளைய சமூகம் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்திகளாக உள்ளனர். இன்டர்நெட்டின் பயன்பாடு விரிவடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் இரவில் செலவழிப்பது, கேமிங் மற்றும் மேலும் பல செயலிகளில் மூழ்கி விடுகின்றனர். இதன் காரணமாக தூங்கும் நேரம் மறந்து இன்றய தலைமுறையினர் அதிக மனஉளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். எனவே இந்த செயல்களை எல்லாம் விடுத்து அதிகநேரத் தூக்கம் பெற்று நம் வாழ்வில் ஆரோகியத்தையும், புத்துணர்சியான, சிறந்த மகிழ்ச்சியான வாழ்வியல் முறையை அமைக்க ஆழ்ந்த தூக்கம் ஒரு சிறந்த நண்பன் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரேச்சல் சலாஸ் சொல்வது  என்ன..?

"ஒரு நல்ல தூக்கம் இருந்தால் உடல் நல்ல ஆற்றல், நல்ல உணர்வு, சிறந்த யோசனைகள்  மற்றும் ஒரு குழுவில் நல்ல பங்களிப்பை தரும் அளவிற்கு செயல்படுவீர்கள்". என்கிறார் ரேச்சல் சலாஸ், நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல் நிபுணர் இவர் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தூக்கம் மருந்து மற்றும் தூக்க குறைபாடுகள் குறித்த நிபுணர்.

தூக்க நண்பனை பிரியதே.

உங்கள் உடலின் தேவை அறிந்து தூக்கத்திற்கான நேரம் ஒதுக்குவது சிறந்தது, நீங்கள் உங்கள் உடலுக்குச் செய்யும் சிறந்த முதலீடு அதுவே. இதை எல்லாம் தவிர்த்து நாம் நம் வேலைப்பளுவில் மூழ்கி, பொருளாதார முன்னேற்றம், வாழ்வியல் முன்னேற்றம் என்று அலைவதால் ஒரு பயனும் இல்லை என்பதே உன்மை ஏன் என்றால் அந்த அனைத்து முன்னேற்றத்தையும் அனுபவிக்க நாம் முதலில் உயிரோடு இருக்க வேண்டும். எனவே நன்றாகத் தூங்கி ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தூக்க நண்பனை பிரியாமல் இருப்பதே சிறந்தது.

News Counter: 
100
Loading...

sasikanth