இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து : மத்திய அரசு

share on:
Classic

ரபேல் ஆவணங்கள் கசியவிடப்பட்டது தேசப்பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் செயல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

கடந்த 6ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டதாகவே கூறியதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 8 பக்க பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் அதிகாரபூர்வமற்ற ஆவணங்களை அனுமதியின்றி நகல் எடுத்ததன் மூலம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசப்பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான மத்திய அரசின் உள்மட்ட ரகசியங்களை மட்டும் தேர்வு செய்து, உள்நோக்கத்துடன் ஆவணங்களை வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth