ஆந்திர சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு..!

share on:
Classic

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திராவில் மக்களவைத்தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து அமராவதியில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan