ஜிகர்தண்டா படம் தெலுங்கில் வால்மீகி என்ற பெயரில் ரீமேக்..!!

share on:
Classic

ஜிகர்தண்டா படம் தெலுங்கில் வால்மீகி என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளது

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜிகர்தண்டா. சித்தார்த் ஹீரோவாகவும் லட்சுமி மேனன் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். பாபி சிம்ஹா "அசால்ட் சேது" என்கிற  மாறுபட்ட கேரக்டரில் நடித்து இருந்தார், இந்த கதாபாத்திரத்திற்கு இவருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது, இப்போது இந்த படம் தெலுங்கில் வால்மீகி என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளது. 

சித்தார்த் நடித்த ரோலில் நடிகர் அதர்வா நடிக்க இருக்கின்றார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகம் ஆக உள்ளார். பாபி சிம்ஹா ரோலில் வருண் தேஜ் நடிக்கின்றார். லட்சுமி மேனன் நடித்த ஹீரோயின் ரோலுலில் பூஜா ஹேக்டே நடிக்க உள்ளார். மேலும் இந்த வால்மீகி படத்தை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்க உள்ளார்.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan