சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி.. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

share on:
Classic

செய்தியாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், ராம் ரஹீம் பற்றிய உண்மைகளை வெளியிட்ட செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி 2002ம் ஆண்டு குர்மீத்தின் அடியாட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இது தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராம் ரஹீமை குற்றவாளி என அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரம் ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்ட போது அரியானா, ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind