மியான்மர் சிறையிலிருந்த ராய்டர்ஸ் பத்திரிகையாளர்கள் விடுதலை : அமெரிக்கா வரவேற்பு..!!

share on:
Classic

ஒரு ஆண்டுக்கு மேலாக மியான்மர் சிறையிலிருந்த ராய்டர்ஸ் பத்திரிகையாளர்கள் விடுதலைக்கு அமெரிக்கா வரவேற்றுள்ளது. 

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அந்த தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்கள் சிறையிலிருந்து விடுதலை அடைந்தனர். 500 நாட்களுக்கு பிறகு அவர்கள் அதிபரின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் செய்தியாளர்களின் விடுதலையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரோஹிங்கயா முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள், 2017 டிசம்பரிலிருந்து, 1 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ள சிறையில் இருந்தனர். அவர்கள் விடுதலையடைந்து குடும்பத்தினருடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் பர்மா சிறைகளில் பத்திரிகையாளர்களும் விரைவில் விடுதலை அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya