மீண்டும் தாக்குதல் நடத்த ஜெயிஷ் இ தீவிரவாதிகள் திட்டம்..?

share on:
Classic

ஜெயிஷ் இ தீவிரவாதிகள் காஷ்மீரில் வரும் மாதங்களில் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய பாதுகாப்பு படைகள் ஜெயிஷ் இ தலைவர்களை காஷ்மீரிலிருந்து அழித்துவிட்டதாகவும் எனவே ஜெயிஷ் இ அமைப்பின் வலிமையை நிரூபிக்க அவர்கள் புதிய தீவிரவாத தளங்களை அமைத்துள்ளதாக தீவிரவாதத்தடுப்பு பிரிவு மற்றும் காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு படைகள் பெரும்பான்மையான தீவிரவாதிகளை அழித்திருந்தாலும் சோபியான் மாவட்டத்தில் ஒரே ஒரு ஜெயிஷ் கமாண்டர் தற்போதும் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய விமானப்படை பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகளை அழித்த பிறகு அந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதன் காரணமாக வரும் மாதங்களில் அவர் காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

News Counter: 
100
Loading...

Ramya