‘ஜாக் அருவி’ பற்றிய தகவல்கள் உங்களுக்காக..!!

share on:
Classic

கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே இருக்கும் இந்த அருவிக்கு கெர்சோப்பா அருவி என்ற பெயரும் உண்டு.

இந்த அருவி கிட்டதட்ட 335 மீட்டர் உயரத்திலிருந்து நீர் கொட்டுகிறது. ஷராவதி நதியில் இருந்து உருவாகும் ஜாக் அருவி, ரோரர், ராக்கெட், ராஜா, ராணி ஆகிய நான்கு அருவிகளைக்கொண்டது. அருவிகளின் அடிப்பகுதிக்குச் செல்வதற்கு கர்நாடக சுற்றுலாத் துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் லிங்கனமக்கி அணையும் இருக்கிறது. ஜாக் அருவியில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை நீர் பெருக்கெடுத்து ஓடும்.

ஜாக் அருவிக்கு செல்ல தமிழகத்திலிருந்து கோவை,மைசூர்,ஷிமோகா,சாகர் வழியாக சென்றால் 750 கி,மீ. ரயில் மூலம் செல்லவோர் சாகர் அல்லது தலகுப்பா ரயில் நிலையத்தில் இறங்கி ஜாக் அருவிக்கு செல்லலாம். தமிழகத்திலிருந்து நேரடியாக ரயில்கள் கிடையாது. பெங்களூரில் இருந்து ரயில்கள் மாறி செல்ல வேண்டும். சென்னையில் இருந்து 550 கி.மீ, கோவையில் இருந்து 750 கி.மீ, பெங்களூரூவில் இருந்து 400 கி.மீ, ஷிமோகாவில் இருந்து 100 கி.மீ இருக்கும்

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan