காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

share on:
Classic

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு கொண்டு அடக்கினர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. புனித சவேரியார்  ஆலய  விழாவை நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind