பாக்ஸ் ஆபிஸில் டைட்டானிக்கை மூழ்கடித்த Avengers Endgame : ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு..

share on:
Classic

பாக்ஸ் ஆபிஸில் டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படக்குழுவினருக்கு ஜேம்ஸ் கேம்ரூன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

1997-ல் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படம் அதிகவசூல் செய்த 2-வது படமாக இருந்து வந்தது. ஆனால் மார்வலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் அந்த சாதனையை முறியடித்தது. டைட்டானிக் படத்தின் மொத்த வசூல் 2.1 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ. 14,667 கோடியாகும். அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் உலகளவிலான தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் 2.78 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ. 19,417 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக அவெஞ்சர்ஸ் லோகோ டைட்டானிக் கப்பலை மூழ்கடிக்கும் படத்துடன் ஜேம்ஸ் கேமரூன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “ கெவின் (தயாரிப்பாளர்) மற்றும் மார்வலில் உள்ள ஒவ்வொருக்கும், எனது வாழ்த்துக்கள். உண்மையான டைட்டானிக் கப்பலை பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துள்ளது. உங்களின் சாதனைக்கு தலைவணங்குகிறேன். திரைப்படத் துறை உயிரோடு உள்ளது என்று மட்டுமல்ல, அது முன்னெப்போதுமையும் விட பெரியது என்று நீங்கள் காட்டியுள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் தற்போது ஜேம்ஸ் கேமரூமின் அவதார் படம் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  

News Counter: 
100
Loading...

Ramya