ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது : மோடி பெருமிதம்..!

share on:
Classic

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இரவு 8 மணிக்கு உரையை தொடங்கிய பிரதமர் மோடி 39 நிமிடங்கள் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். 370 வது சட்டப்பிரிவு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், அது ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என உறுதியுடன் தெரிவித்த பிரதமர், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே என்றும், நிலமை சீரடைந்ததும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan