வரும் நவம்பரில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்..?

share on:
Classic

வரும் நவம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டதால், அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி பதவி விலகினார். எனவே அம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து கவர்னர் ஆட்சி நடைபெற்றது. பின்னர 2018, டிசம்பரிலிருந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியின் பதவிக்காலம் 6 மாதங்கள் தான் என்பதால், வரும் ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் வரை மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டபேரவைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அரசின் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் உள்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தலை நடத்தக்கோரி உள்ளதாகவும் தெரிகிறது. வரும் நவம்பரில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதனுடன் சேர்த்து ஜம்மு ஜாஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த திட்டம் நிராகரிப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Ramya