ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெடிகுண்டுத் தாக்குதல்: 11 பேர் படுகாயம்

share on:
Classic

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், பொதுமக்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லால்சவுக் பகுதியில் உள்ள பல்லாடியம் காலியில், பயங்கரவாதிகள் சிலர் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில், பொதுமக்கள் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind