ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர், தீவிரவாதி சுட்டுக்கொலை

Classic

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இந்த மோதலில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரத்னிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். படுகாயமடைந்த மற்றொரு வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில், 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

aravind