ஜாம்ஷெட்பூர் சிறையில் கலங்கிய கைதிகள்

share on:
Classic

ஜாம்ஷெட்பூர் சிறைச்சாலையில் 11 கைதிகளிக்கு எச்.ஐ.வி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஜார்கண்டில் உள்ள மகாத்மா காந்தி மெமோரியல் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில், ஜாம்ஷெட்பூர் சிறையில் உள்ள 1,300 சிறைகைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் 11 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக எதிர்ப்பு ரெட்ரோவைரல் தெரபி (ART) மையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் சமீபத்தில் விடிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாம்ஷெட்பூர் சிறையில் இன்னும் 700 சிறைக்கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதால் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. 
  

News Counter: 
100
Loading...

udhaya