’பேட்ட’ இதோ வந்துட்டாங்கையா நம்ப ஜப்பான் ரசிகர்கள்..!

share on:
Classic

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியான பேட்ட திரைப்படத்தை பார்க்க ஜப்பான் ரஜினி ரசிகர்கள் சென்னை வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து வெளியான பேட்ட திரைப்படம் இன்று வெளியானது. விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், சிம்ரன், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டளாம் நடித்துள்ள இந்தப் படம் முற்றிலும் ரஜினி ரசிகர்களுக்கான ‘ரஜினியிஸம்’ படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ரஜினியின் கடைசி படங்களில் மாஸ் ரஜினியை பார்க்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக பேட்ட படம் ரஜினியின் ஸ்டைலிஷான படமாக இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தை பார்ப்பதற்காக ரஜினியின் ஜப்பான் ரசிகர்கள் இன்று அதிகாலை சென்னை வந்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் அவரது மனைவி மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த அவர்கள் பேட்ட படத்தை பார்க்க ஜப்பனிலிருந்து சென்னை வந்ததாக தெரிவித்தார். “ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்”, “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி”, “நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வருவேன்” போன்ற மாஸான ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை சொல்லி அசத்தினர் ஜப்பான் ரஜினி ரசிகர்கள்.  ‘பேட்ட பராக் பராக்’என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், சென்னை காசி தியேட்டரில் பேட்ட படத்திற்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடனக்குழுவுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டு அசத்திவிட்டனர்.

News Counter: 
100
Loading...

aravind