ஒரு வருடமாக 'கரப்பான்' பூச்சியோடு குடும்பம் நடத்திய மனிதர் ...!

share on:
Classic

பூச்சிகளின் மேல் கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக, இளைஞர் ஒருவர் 1 வருட காலமாக கரப்பான் பூச்சியுடன் குடும்பம் நடத்திய அதிசயம் நடந்துள்ளது. இன்று நீங்கள் கேட்க கூடிய மிக அதிர்ச்சியான செய்தி இதுவாக தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

கரப்பான் பூச்சி காதல்:

ஜப்பானை சேர்ந்த 25 வயது வாலிபரான 'யுட்டா ஷினோரா' என்பவர் தான், இந்த வினோத்திற்கு சொந்தக்காரர். நம்மில் பலருக்கும் பூச்சிகள் என்றாலே அருவருப்பு தான். பூச்சி கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்தால் அச்சமும் கூட. ஆனால் அவருக்கு சிறு வயதில் இருந்தே பூச்சிகள் என்றால் கொள்ளை பிரயமாம். எப்போதும் பூச்சிகளை பற்றி ஆராய்வதில் தன் நேரத்தை செலவிடுவாராம். இந்நிலையில் தான் இந்த பிரியம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக ஒரு பூச்சியை காதலித்து விடுவது என முடிவு செய்தார். ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கிருந்து ஒரு கரப்பான் பூச்சியை வாங்கி வந்துள்ளார். அதன் மீது மிகுந்த அன்பு கொண்டு அதனை தன் காதலியாகவே பாவித்து வாழ்ந்துள்ளார்.அதிலும் அதற்கு 'லிசா' என்று பெயர் வைத்து அதனை செல்லமாக தான் அழைப்பாராம். அதிலும் எந்த பெண்ணிலும் இல்லாத அழகு லிசாவிடம் உள்ளதாக வாதாடுகிறார் அவர்.

 

லிசாவுக்கு ஏற்பட்ட சோகம்:

தன் காதல் விவகாரத்தில் சீரியஸாக இருந்த யுட்டா, சில சமயங்களில் அந்த பூச்சியுடன் உடலுறவு வைக்க  கூட நினைத்துள்ளாராம். இதற்கு மேல் என்ன சொல்வது? ஆனால் இந்த தெய்வீக காதலுக்கு கடவுள் முற்று புள்ளி வைத்துவிட்டார். ஆம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு லிசா இறந்து விட்டதாம். மிகுந்த சோகத்தில் இருந்த யுட்டா செய்ததை கேட்டால் நீங்கள் வாயை பிளப்பீர்கள். இறந்த லிசாவை அவர் முழுவதும் சாப்பிட்டு முடித்துள்ளார். காரணமா கேட்டால் "லிசா கடைசி வரை என் உடலில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அதற்கு தான் இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.  

 

வினோத பழக்கம்:

பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் யுட்டா, அதை மற்றவர்களுக்கும் பின்பற்றும் படி அறிவுறுத்தி வருகிறாராம். மற்ற மாமிசங்களை விட பூச்சிகள் மனிதரின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று கூறும் அவர், ஜப்பானில் பூச்சி உண்ணும் போட்டிகளை நடத்தி வருகிறாராம். நமக்கு இது புதுசாக இருக்கலாம் ஆனால் இன்னும் உலகின் பல பகுதிகளில் பூச்சிகளை உணவாக உண்ணும் பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

youtube