உங்கள் கதையை கேட்க யாருமே இல்லையா?? நாங்க இருக்கோம் !! ஒரு மணி நேரத்திற்கு 700ரூ தான் !!

share on:
Classic

மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரின் சோக கதைகளை கேட்பதற்கு ஜப்பான் நிறுவனம் ஒன்று 700 ரூபாய் கட்டணம் பெறுகிறது. இதற்கென்று  நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே பணி அமர்த்தபடுகின்றனர் என்பது கூடுதல் தகவல். 

யாருக்கும் நேரமில்லை :

சில நேரங்களில் நாம் சோகத்தில் இருக்கும் போது யாரவது நம் கதையை கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து இருப்போம். வேறு சில சமயங்களில் 'ஓ'வென்று கத்த வேண்டும் போல கூட இருந்திருக்கும். சிலரோ மன அழுத்தத்தில் இருக்கும் நேரங்களில் தங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு போன் செய்து கொட்டி தீர்ப்பார்கள். ஆனால் இப்பொது இருக்கும் உலகில் நமது கதையை  கேட்க யாருக்கும் நேரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. வேகமாக சுழன்று கொண்டிருக்கும் உலகில் யாராவது உங்கள் கதையை பொறுமையாய் கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா. கவலைப்படாதீர்கள் அடுத்த முறை  மனஅழுத்தம் என்றால் உடனே கிளம்பி ஜப்பான் போய்டுங்க !!

 

கதை கேட்க 700 ரூ :

ஜப்பானை சேர்ந்த 'தக்னபோ நிஷிமோட்டோ' என்பவர் ஒரு ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் பெயர் "Ossan" அப்படியென்றால் ஜப்பான் மொழியில் நடுத்தர வயது ஆண்கள் என்று அர்த்தமாம். ஒருவருக்கு மன அழுத்தம் உள்ள நேரத்திலோ இல்லை யாரிடமாவது மனசு விட்டு பேச வேண்டும் என்று நினைத்தாளோ இந்த நிறுவனத்துக்கு போன் செய்தால் போதும். உங்களுக்கு நடுத்தர வயது ஆண் ஒருவர் உங்களுக்கு ஒதுக்கப்படுவார். அவர் உங்கள் கதைகளை பொறுமையாக கேட்பார். இதன் மூலம் உங்கள் மன அழுத்தம் காணமால் போய்விடும். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு 700 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. எது எப்படியோ இதன் மூலம் தற்கொலைகள் குறைந்தால் சரி .

 

நிரூபிக்க தான் அப்படி செய்தேன் !

இதன் நிறுவனர் தக்னபோ கடந்த பல வருடங்களாக மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார். எல்லாம் சரி அது என்ன நடுத்தர வயது ஆண்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு. " பொதுவாகவே நடுத்தர வயது ஆண்களுக்கு பொறுமை இருப்பதில்லை என்று பலரும் கருதுகின்றனர். அது தவறு என்பதை நிரூபிக்க தான் அவர்களை தேர்ந்தெடுத்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu