ஆஸி. ஒருநாள் மற்றும் நியூசி. தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு

share on:
Classic

ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் நியூசிலாந்து தொடர்களிலிருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சரித்திர சாதனை படைத்தது. இந்த வெற்றியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெருமளவு பங்குள்ளது. குறிப்பாக, இந்த தொடரில் அசத்தலாக பந்து வீசிய பும்ரா 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலித்தார்.

அவருக்கு அதிக சுமை அளிப்பதை விரும்பாத பி.சி.சி.ஐ. வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளது. அவருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது சிராஜும், நியூசிலாந்து தொடருக்கு சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind