அதிர்ச்சியில் அப்பல்லோ நிர்வாகம் மற்றும் சசிகலா தரப்பு

share on:
Classic

மருத்துவ குழு அமைக்கப்பட்டு பணிகள் முடிந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜபருல்லா கான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவால் அப்பல்லோ மற்றும் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மருத்துவ சொற்கள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, தமிழில் பதிவு செய்யப்படுவதால் ஆணையம் மருத்துவ குழு அமைக்கவேண்டும் என ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தது.

இதற்கு ஆணையத்தின் வழக்கறிஞர் ஜபருல்லா கான், பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த அக்டோபர் மாதமே சென்னை மருத்துவ கல்லூரி தலைவர் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவை அமைத்தார் என்றும், அவர்கள் மருத்துவ ஆவணங்களை நவம்பர் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பல்லோ நிர்வாகம் மற்றும் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth