தி.மு.க-வுக்கு ஜெயக்குமார் சவால்..!!

share on:
Classic

தமிழக மக்களுக்கு நன்மை செய்தது யார் என தி.மு.க-வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

தமிழக மக்களுக்கு நன்மை செய்தது யார்? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், "நன்மை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசா அல்லது தி.மு.க அரசா..?, புரட்சித் தலைவரா அல்லது மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியா..?, புரட்சித் தலைவி அம்மாவா அல்லது கருணாநிதியா..? என பேசிய அவர் மேலும், திமுகவுடன் இது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார்" என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்தார். பிறகு எம்.ஜி.ஆர் வழியை போன்றே திமுகவை சட்டப்பேரவை பக்கம் விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க திடமாக இருக்கிறது என்றும், 2011 முதல் 2021 வரை எப்படி திமுகவின் கொடி கோட்டையில் பறக்கவில்லையோ அதைப்போன்று தி.மு.க-வை கோட்டை பக்கம் வராமல் பார்த்துக் கொள்வதுதான் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறும் என அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth