ஜெயலலிதா மரணம் : அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகசாமி ஆணையம்..!

share on:
Classic

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக, விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அப்போலோ மருத்துவர்கள், மருத்துவ ஆய்வக அலுவலர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், அப்போலோ மருத்துவர்கள் 10 பேரும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் மேலாளர் மோகன் ரெட்டி ஆகியோர், வரும் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவை அமைக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan