ரஜினியிடம் மன்னிப்பு கோரிய ஜெயம் ரவி..!

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சிப்பது போன்ற காட்சி இடம் பெற செய்ததற்கு நடிகர் ஜெயம் ரவி மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி கதாநாயகநாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாவும் நடித்துள்ள படம் கோமாளி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதன் இறுதி காட்சியில் நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறுவது போலும், இந்த காட்சி 1996 இல் நடைபெற்ற நிகழ்வு என்று ஜெயம்ரவி கூறுவது போன்றும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இதற்கு ஜெயம் ரவி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை உற்று நோக்கி காத்திருக்கும் ஆட்களில் தானும் ஒருவன் என்றும், இது காமெடியான படம் என்பதால் சித்தரிப்புக்காக இந்த காட்சி வைக்கப்பட்டது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan