வித்தியாசமான தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் “கோமாளி” : டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

share on:
Classic

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

அடங்க மறு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காமெடி படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஐசரி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த அடிமை, ஆதிவாசி, 1990களில் வாழ்ந்த இளைஞர், ராஜா ஆகிய வேடங்களை உறுதிசெய்த படக்குழுவினர், மீதமுள்ள 5 வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குழப்பத்தில் உள்ள நோயாளி போல காட்சியளிக்கும் ஜெயம் ரவியை சுற்றி சமூக வலைதளங்களின் குறியீடுகள் உள்ளன. கோமாளி என்ற எழுத்துக்களில் 1990, 2000, 2005, 2010, 2013, 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாகவும், ரசிக்கும்படி உள்ளதாக ரசிகர்கள் #ComaliFirstLookஎன்ற ஹேஷ்டாகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 

News Counter: 
100
Loading...

Ramya