ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்தவர்களுக்கான புதிய வெப் போர்டல்..!!

share on:
Classic

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வேலை இழந்த ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் புதிய வெப் போர்டலை உருவாக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

ஜெட் ஏற்வேஸ் விமான நிறுவனம் கடன் பிரச்சனையால் சிக்கி விமான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு, ஊழியர்களும் வேலையிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் வேலை இழந்தது குறிப்பிடத்தக்கது. சிலர் வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும்  பலர் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூடியை நேரில் சந்தித்து விமான நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவும், வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது இந்நிறுவனதால் வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக புதிய வெப் போர்டல் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிருவனத்தின் மூலம் வேலை இழந்த ஊழியர்களின் பெயரையும் அவர்கள் தகுதியுடன் பிற நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட்டு வருவதாகவும், இதற்காக புதிய வெப் போர்டல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் அவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதோடு தனியார் நிறுவனத்தின் வணிக தோல்விக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றும், ஜெட் ஏர்வேஸ் நிதி திரட்டுவதில் அரசாங்கத்திற்கு எந்த பங்கும் இல்லை எனவும் தெரிவித்தார். ஒவ்வொறு விமான நிறுவனமும் தனது பொறுப்புகளின் அடிப்படையில் தனது வணிக திட்டத்தினை தயாரிக்கிறது. அதற்கு அந்த நிறுவனங்களே முழு பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan