ஜெட் ஏர்வேஸ் விமானிகள் போராட்டம்..!

share on:
Classic

பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் ரூ. 8,000 கோடி கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முடியாமல், பல மாதங்களாக இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்கப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

News Counter: 
100
Loading...

Ragavan