ஜெட் ஏர்வேஸ் கடனுக்காக 26 % பங்குகளை அடமானம் வைத்த பங்குதாரர்..!!

share on:
Classic

ஜெட் ஏர்வேயஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பஞ்சாப் நேசனல் வங்கியில் வாங்கிய கடனுக்காக 26 சதவீத பங்குகளை அடமானம் வைத்துள்ளது.

நிதி நெறுக்கடியால் ஜெட் ஏர்வேயஸ் நிறுவனமானது பல்வேறு நெறுக்கடியை சந்தித்து வருகிறது. சமீப காலமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு மிகவும் நெறுக்கடியில் உள்ளது. இந்த நெறுக்கடியிலிருந்து மீண்டு வர பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிக பங்குகளை வைத்துள்ள பங்குதாரரான நரேஷ் கோயல் அவரின் 26 சதவீத பங்குகளை அடமானமாக வைத்துள்ளார் அதாவது மொத்தம் 2.95 கோடி பங்குகளை அடமானமாக கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் எஸ்பிஐ தலைமையிலான வங்கி குழு இந்த ஜெட் ஏர்வேயஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை பழைய நிர்வாகத்திடமிருந்து கைப்பற்றியது. இந்த நிறுவனத்தின் பங்கு தாரரான நரேஷ் கோயலின் 56 சதவீத பங்குகளில் 26 சதவீத பங்குகளை பஞ்சாப் நேசனல் வங்கியிடம் தானமாக கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்தின் கடனுக்காக அவரிடமிருந்து மட்டும் 5.79 கோடி அளவிலான பங்குகளை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan