கொளுத்தும் கோடையையும் குளிர்ச்சியாக்கும் குளு குளு ஜிகர்தண்டா..!

share on:
Classic

மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலும், குண்டு மல்லிகையும் தான். அதற்கு அடுத்து பிரபலமான ஒன்று ஜிகர்தண்டா...இந்தப் பெயரைக் கேட்டாலே எல்லோருடைய நாவிலும் நீர் சுரந்துவிடும், அப்படியொரு சுவை...இதனை சாப்பிடவே பலரும் மதுரைக்கு செல்வார்கள். அதிலும் கோடையில் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அதன் சுவையும் பதமும் இருக்கும். 

 

கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியும், உடலின் சோர்வை போக்கும் பானமாக உள்ள ஜிகர்தண்டா கடற்பாசி, சர்க்கரை, பால் , நன்னாரி சர்பத், சவ்வரிசி, பாதாம் பிசின் போன்ற பொருட்களை  சேர்த்து சுவையை விஞ்சிய ஒரு பானமாக தயாரிக்கப்படுகிறது. அவ்வளவு சுவை மிக்க ஜிகர்தண்டாவை சுவைக்க உள்ளுர் மட்டும் இன்றி மதுரைக்கு வரும் வெளியூரை சேர்ந்தவர்களும் சாப்பிடாமால் சென்றதே இல்லை என்று அங்கு வரும் வாடிக்கையாளர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

 

பல்வேறு வீதிகளில் ஆங்காங்கே ஜிகர்தண்டா கடைகள் முளைத்துவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு சில குடும்பம்தான் பாரம்பரியமான முறையில் பரம்பரை பரம்பரையாக இதனை தயாரித்து வருகின்றன. மதுரையைத் முந்நூறு ஆண்டுகளாக ஆட்சி நடத்திய நாயக்க அரசர்கள் மட்டும் அருந்தி வந்த ராஜபானம், இன்று பொது மக்கள் விரும்பி அருந்தும் பானமாக மாறியிருப்பதாக கூறும்  ராஜா முகமது 40 வருடமாக இந்த கடை நடத்தி வருவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறார் ....
 

 

ஜிகர்தண்டாவை நடுத்தர மக்களும் வாங்கி உண்ணும் வகையில் அதன் விலையும் இருக்கிறது. பாண்டிய நாட்டின் ராஜபானமான ஜிகர்தண்டாவை  நாமும் சுவைப்போம்... 

News Counter: 
100
Loading...

aravind