உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகல்..?

share on:
Classic

தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலக வங்கி தலைவர் எனும் ஆகப்பெரிய பதவி:

வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக வங்கி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமெரிக்க அரசால் பரிந்துரைக்கப்படும், அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் மட்டுமே உலக வங்கி தலைவராக முடியும் என்பது உலக வங்கியின்  மரபு.  கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஜிம் யாங் கிம். அவரது பதவிக்காலம் 2017-இல் முடியவிருந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு மீண்டும் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார். 2022-ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தனது பதவியிலிருந்து வலகுவதாக அவர் அறிவித்துள்ளதார். பதவி விலகலுக்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது பதவி விலகலை தொடர்ந்து  பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
 

 

மதிப்புமிக்க பணி:

உலகம் முழுதும் உள்ள ஏழைகளின் நிலையை முன்னேற்றுவது, வறுமையை முற்றிலும் ஒழிப்பது, காலமாற்றம், அகதிகள் தொடர்பான பிரச்சனைகள் , பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு இவற்றை முன்னேற்றுவதற்கான பணிகள் சவாலான பணிகளாக இருந்ததாக ஜிம் யாங் கிம் தெரிவித்துள்ளார். உலக வங்கி தலைவராக சேவை செய்தது மிகப்பெரிய மரியாதையை அளித்திருப்பதாக தெரிவித்த அவர் இந்த பதவியில் இருந்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் தெரிவித்தார். இவரது தலைமையின் கீழ் இரண்டு முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. 2030-ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழித்து செழிப்பான உலகத்தை உருவாக்குதல், வளரும் நாடுகளில் மக்கள் தொகையை 40 சதவீதம் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 

 

ஜிம் யாங் கிம்-ன் சாதனைகள்:

2018-ஆம் ஆண்டு உலக வங்கியின் கவர்னர்கள் இணைந்து வங்கியின் முதலீட்டை சுமார் 13 பில்லியன் அளவுக்கு உயர்த்தி வழங்க அனுமதி அளித்தனர். இதன் மூலம் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. கிம்-ன் பதவிக்காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 6 வருடங்களில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இருந்தாலும் வங்கி நிதிநிலை நெருக்கடிக்கு உட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind