தொடர்ந்து முன்னேறும் ஜியோ..!! இறங்குமுகத்தில் ஏர்டெல், வோடோபோன்-ஐடியா நிறுவனங்கள்..

share on:
Classic

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜியோ நிறுவனம் 80.82 வாடிக்கையாளர்களை கூடுதலாக இணைத்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் ஜியோ நிறுவனத்தில் 30 கோடி வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 90 லட்சம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர் என்று ட்ராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் மட்டும் ஜியோவில் புதிதாக 80.82 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதனால் தற்போது அந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 31.48 கோடியாக உள்ளது. 

அதே நேரத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தின் முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 32.89 லட்சம் பயனாளர்களை இழந்து தற்போது 32.19 கோடி வாடிக்கயாளர்களை கொண்டுள்ளது. இதே போல் வோடோபோன் - ஐடியா நிறுவனமும் 15.8 லட்ச இணைப்புகளை இழந்து தற்போது 39.32 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. 

இதே நிலை தொடர்ந்தால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வரும் ஏர்டெல், வோடோபோன் - ஐடியா நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விரைவில் ஜியோ அதிக பயனாளர்களை கொண்ட நிறுவனமாக மாறும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 
 

News Counter: 
100
Loading...

Ramya