குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நேரடி ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ஜியோ டிவி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகுளிர்கால ஒலிம்பிக் போட்டியை நேரடி ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ஜியோ டிவி

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நேரடி ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ஜியோ டிவி

February 09, 2018 235Views
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நேரடி ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ஜியோ டிவி

2018 -ம் ஆண்டு பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஜியோ டிவி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் மாகாணத்தில் 2018-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வரும் 9-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஸ்கையிங், ஸ்கேட்டிங், ஸ்கை ஜம்பிங், ஐஸ் ஹாக்கி, ஸ்னோ போர்டிங் உள்ளிட்ட 102 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரபல டிவி செயலியான ஜியோ டிவி 2018-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான இந்திய டிஜிட்டல் உரிமைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.