தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளருக்கு நேர்ந்த கொடுமை..!!

share on:
Classic

தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரை, ரயில்வே போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற பத்திரிகையாளரை இந்திய ரயில்வே போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் “ அவர்கள் போலீஸ் உடையில் இல்லை. அவர்களில் ஒருவர் என் கேமராவை தள்ளிவிட்டார், அதனை நான் எடுக்க முயன்ற போது என்னை கடுமையாக தாக்கினர். மேலும் என் வாயில் சிறுநீர் அடித்தனர்” என்று வேதனை தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து ஷாமிலியில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் இரவு முழுவதும் சிறையில் இருந்தார். இன்று அதிகாலை அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியே வந்தார். அமித்ஷா தாக்கப்பட்டதை கண்டித்து சக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, ரயில் போலீசார் ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டெபிள் சஞ்சய் பவார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ramya