கமல்ஹாசனின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ஆம் தேதி வழங்கப்படும் - நீதிமன்றம்

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் முன் ஜாமின் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 20-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan