ஜூலியன் அசாஞ்சேவுக்கு 11 மாதம் சிறை..!

share on:
Classic

லண்டனில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சேவுக்கு 11 மாதம் சிறைத்தண்டனை வழங்கி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இவர் மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈகுவேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

பின்னர், லண்டன் வெஸ்ட் மினிஸ்ட் கோர்ட் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான பாலியல் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 50 வாரம்  சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும், அசாஞ்சேவின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind