ஜூலை 8 : பட்ஜெட் எதிரொலி...! சரிந்தது சந்தை...!

share on:
Classic

பட்ஜெட் திட்டங்களால் பங்குச்சந்தை மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகள் சரிந்து 38,721 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 252 புள்ளிகள் சரிந்து 11,559 புள்ளிகளில் வர்த்தகமாகியது. 

மும்பை பங்குச்சந்தையில் யெஸ் பேங்க், DR லால்பத் லேப்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சிம்ஃபனி லிமிடெட், கியூமின்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பஞ்சாப் தேசிய வங்கி, மைண்ட்ட்ரீ லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடட், பேங்க் ஆப் இந்தியா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.                    

தேசிய பங்குச்சந்தையில் யெஸ் பேங்க், HCL டெக்னாலஜீஸ் லிமிடெட், பாரதி இன்ஃப்ராடெல் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், JSW ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட், ஓ.என்.ஜி.சி (ONGC), என்.டி.பி.சி(NTPC), ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

News Counter: 
100
Loading...

udhaya