செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை - பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமாவை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை

Classic

பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமாவை தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு செங்கோட்டையன் வசம் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெறுபவா்கள் பதவி இழக்க நேரிடும் என்பதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை தமிழக அரசு பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வசம் ஒப்படைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth