காலா படம் வெளியாவதில் சிக்கல்

Classic

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் தான் காலா, இந்த படம் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தேதி மாற்றம் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் தற்போது படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலா படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ரம்ஜானுக்கு வெளியிடலாம் என லைகா நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 

அதே தேதியில் சல்மான் கானின் ரேஸ் 3 படமும் வெளிவருகிறது. காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதாலும், பல பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளதாலும் இந்த படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.ஆனால் தற்போது , வெளியீட்டு தேதி மாற்றத்தால் வசூல் குறைய வாய்ப்புள்ளது.

News Point One: 
காலா வெளியாவதில் சிக்கல்
News Point Two: 
சல்மான் படத்துடன் போட்டியிடவுள்ள காலா
News Point Three: 
வசூலில் பிரச்சனை ஏற்படும் என கூறப்படுகிறது
News Counter: 
200

Parkavi