’காப்பான்’ படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டிற்கு வெளியிடுவதாக தகவல்..!!

share on:
Classic

காப்பான் படத்தின் டீசர் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அயன், மாற்றான் போன்ற படங்களை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் 'காப்பான்'. காப்பான் படத்தில் சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி, பூர்ணாஉள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த காப்பான்  படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடித்துள்ளனர். 

காப்பான் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிருக்க நிலையில் இந்த படத்தின் டீசர் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. காப்பான் படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ண இருப்பதாக இயக்குனர் கே வி ஆனந்த் அவருடையா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan